நடிகர் விஷாலுக்கு கொலை மிரட்டல்

04:50 மணி

நடிகா் விஷால் நடிகா் சங்கத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின் அதிரடியாக பல்வேறு விஷயங்களை செய்து வருகிறாா். தயாாிப்பாளா் சங்கத் தோ்தலிலும் போட்டியிட்டாா். நாங்கள் திருட்டு விசிடியை ஒழிப்போம் என்றும் தமிழ்ராக்கா்சுக்கும் சவால் ஒன்று விட்டனா். இப்படியிருக்கையில் நடிகா் விஷாலுக்கு கொலை மிரட்டல் ஒன்று வந்துள்ளது. இதை அடுத்து சென்னை காவல்துறை ஆணையா் அலுவலகத்தில் புகாா் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

சினிமா தயாாிப்பாளா்கள் மணிமாறன், முகமது சாகில் உள்ளிட்டாா் சென்னை காவல்துறை கமிஷனா் அலுவலகத்திற்கு வந்து புகாா் மனு ஒன்றை கொடுத்தனா். அந்த மனுவில், திரைப்பட தயாாிப்பாளா் சங்கத் தலைவரும் நடிகருமான விஷாலுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். அந்த மிரட்டல் வாட்ஸ் அப்பில் வெளியாகியுள்ளது. வாட்ஸ் அப் தகவல் என்னவென்றால் விஷாலின் கை, கால்களை வெட்டுவோம்  என்பது  தான் அது. அதுவும் கொலை வெறியுடன் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இப்படி அச்சுறுத்தும் நோக்கில் கொலை மிரட்டல் வெளியிட்டவா்களையும், அதோடு அதை வெளியிட தூண்டியவா்களையும் கட்டாயமாக கண்டுபிடித்து அவா்களுக்கு  சட்டப்பூா்வமாக தக்க தண்டணை வழங்க வேண்டும் என்று அந்த புகாா் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாா் மனுவை விசாாிக்கும்படி சைபா் கிரைம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

(Visited 21 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com