பாலிவுட் நடிகை சமிதா ஷெட்டியின் கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதோடு, தவறாக பேசிய மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மும்பையில் வசித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை சமிதா ஷெட்டி(39). இவர் நடிகை ஷில்பா ஷெட்டியின் சகோதரி ஆவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

நேற்று முன்தினம் சமிதா ஷெட்டி காரில் தானே நகருக்கு சென்று கொண்டிருந்தார். காரை அவரின் டிரைவர் தர்சன் சாவந்த் ஓட்டி சென்றுள்ளார். தானேயில் உள்ள விவியான் வணிக வளாகம் அருகே சென்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் காரின் மீது மீதியது. இதில், கார் லேசாக சேதம் அடைந்தது. அந்த மோட்டார் சைக்கிளில் 3 பே வந்ததாக தெரிகிறது.

இதையடுத்து, கார் ஓட்டுனர் கீழே இறங்கி அந்த 3 பேரிடம் இதுபற்றி கேட்டுள்ளார். அப்போது, அந்த 3 பேரும் ஓட்டுனரை தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், சமிஷா ஷெட்டியையும் தவறாக பேசிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதையடுத்து, சமீதா ஷெட்டி ரபோடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அந்த மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.