இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் மூன்று வில்லன்கள் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இவர்களில் ஒருவர் ராதாரவி என்றும், இன்னொருவர் பழம்பெரும் அரசியல் தலைவர் பழ.கருப்பையா என்றும் தெரிய வந்துள்ளது. மூன்றாவது வில்லன் பெயரை கேட்டால் ரசிகர்கள் ஆச்சரியப்படுவார்கள் என்றும், அந்த அளவுக்கு அந்த நடிகர் பிரபலமானவர் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

இதையும் படிங்க பாஸ்-  ஒவியாவை பிடித்தற்கு ஆரவ் சொன்ன காரணம்!

ஒரு ஆக்சன் படத்தில் வில்லனின் கேரக்டர் எந்த அளவுக்கு வலிமையாக இருக்கின்றதோ, அதை பொறுத்துதான் அந்த படத்தின் சுவாரஸ்யம் அதிகரிக்கும். அந்த வகையில் மூன்று வில்லன்களுடன் அதிரடியாக உருவாகும் இந்த படம் நிச்சயம் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது