நீண்ட இடைவேளைக்கு பிறகு மாதேஷ் இயக்கி இருக்கும் இப்படம் நன்றாக வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் மாதேஷ் இயக்கிய மதுர, அரசாங்கம் இரண்டு படங்களும் நல்ல விறு விறு திரைக்கதையுடன் இயக்கி இருப்பார் அந்த நம்பிக்கையே அனைவரையும் தியேட்டருக்கும் இழுக்கும்.

படத்தில் த்ரிஷா. வைஷ்ணவி, மோகினி என இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறாராம் பல வருடத்திற்கு பிறகு வந்து எதிரிகளை பழிவாங்கும் வழக்கமான பேய்க்கதை என்றாலும் அதை விறுவிறுப்பாக சொன்ன விதத்திலும் ஈர்க்கிறாராம் மாதேஷ், இரண்டாவது பாதி என்று சொல்ல கூடிய செகண்ட் ஆஃப் ரொம்ப நல்லா இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. த்ரிஷா சண்டையெல்லாம் போட்டு பிரமாதப்படுத்தி இருக்கிறாராம் இப்படத்தில்.க்ராபிக்ஸ் காட்சிகளும் மிக அருமையான முறையில் வந்திருப்பதாக படம் பார்த்த ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.