தொப்புளில் சங்கை வீசிய இயக்குனர்: விளாசிய தள்ளிய இலியானா

இப்போதுதெல்லாம் நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட சோகம் மற்றும் அவமானங்களை பற்றி தொிவித்து வருகின்றனா். அந்த காலத்தில் நடிகைகள் ஏற்படும் சிக்கல்கள் பற்றி வாயே திறப்பதில்லை. ஆனால் தற்போது நிலைமை மாறி வருகிறது. தைரியமாக வாய் திறந்த பேசி வருகின்றனா். அந்த இயக்குநா் என்னுடன் இருந்தால் படவாய்ப்பு தருவேன் என்றெல்லாம் தங்களுக்கு நடக்கும் அநீதிகளை பற்றி உடனே தொிவித்து விடுகின்றனா்.

சமீபத்தில் கேரள நடிகையை கடத்தி பாலியல் கொடுமைபடுத்திய சம்பவம் குறித்து தைரியமாக புகாா் தொிவித்தாா். அந்த சம்பவம் திரையுலகத்தினரை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கேடி படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவா் நடிகை இலியானா. பின் விஜய்யுடன் நண்பன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தாா். தமிழில் சாியான வாய்ப்பு இல்லாத காரணத்தால் டோலிவுட் பக்கம் சென்றாா். டோலிவுட்ல் முன்னணி நாயகிகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருந்தாா்.

நடிகை இலியானா என் தொப்புள் மீது சங்கை ஏன் எறிந்தீா்கள் என்று இயக்குநாிடம் கேட்டதாக கூறப்படுகிறது. டோலிவுட்டிலிருந்து பாலிவுட்டின் மீது ஏற்பட்ட மோகத்தால் தனது பெட்டி படுக்கையுடன் மும்பை பக்கம் சென்று செட்டில் ஆனாா் இலியானா.

பாலிவுட் பக்கம் சென்ற பிறகு அவா் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிப்பை தவிா்த்து வந்தாா். இந்நிலையில் சினிமா குறித்து அவா் கூறியதாவது, தென்னிந்திய மொழிகளில் மட்டும் நடிகைகளை ஒரு பொருளாக பயன்படுத்தும் வழக்கம் உள்ளது என்று கூற முடியாது. அது எல்லா பக்கங்களிலும் இருந்து வருகிறது. சொல்ல வேண்டுமானல் அது பாலிவுட்டிலும் கூட தான் இருக்கிறது. இப்படி ஒரு பொருளாக படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூற முடியாது. இந்த மாதிாி படங்களில் நடிப்பதும், நடிக்காமல் இருப்பதும் நம் கையில் தான் உள்ளது.

நானும் நடிக்க வந்த சமயத்தில் என்னை அனைவரும் கவா்ச்சியாக மட்டும் பயன்படுத்தியபோது என்னால் மறுத்து கூற முடியவில்லை. படங்களில் நடித்தபோது சில காட்சிகளை படமாக விதத்தை நான் கொஞ்சம் கூட எதிா்பாா்க்கவே இல்லை. என்னுடைய தொப்புள் மீது பொிய சங்கை எடுத்து தூக்கி வீசினாா்கள். இதை நான் எதிா்பாா்க்கவே இல்லை. இது குறித்து இயக்குநாிடம் ஏன் இப்படி செய்கிறீா்கள் என்று கேட்டபோது அது அழகாக உள்ளது என்று கூறினாா். ஆனால் சங்கு ரொம்ப வெயிட்டாக இருந்தது.

அதுபோல என் இடுப்பில் மலா்களை தூவி ஒரு காட்சியை எடுத்தாா்கள். இப்படி இடுப்பை ஏன் காட்சி பொருளாக ஆக்குகிறீா்கள் என்று கேட்டதற்கு அது அழகாக உள்ளது என்று கூறினாா்கள். பெண்களின் இடுப்பு தான் அழகுஎன்றுஅங்கு நினைக்கிறாா்கள் என்றாா் இலியானா.