சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் வேறொரு படத்தின் கதையை தழுவியது என சர்ச்சை எழுந்துள்ளது.

கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமா கதை திருட்டு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அறம், கத்தி, சர்கார், 96 உள்ளிட்ட பல படங்கள் இந்த சர்ச்சையில் சிக்கின.

தற்போது சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா இணைந்து நடித்து வெளியாகியுள்ள விஸ்வாசம் படமும் கதை திருட்டு பிரச்சனையில் சிக்கியுள்ளது. 2017ம் ஆண்டு வெளியான படம் ‘துளசி’. கணவனின் வன்முறை குணத்தால் அவரை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்கிறாள் மனைவி. அதனால், மகனிடன் தான் அவனின் தந்தை என்பதை மறைத்து பழகுகிறார் அப்பா. அதன்பின் மகனுக்கு ஒரு பிரச்சனை ஏற்பட அதை தந்தை எப்படி சரி செய்தார்? மீண்டும் எப்படி மனைவியுடன் இணைந்தார் என்பதே துளசி படத்தின் கதை. இதில், முக்கிய விஷயம் என்னவெனில் இந்த படத்திலும் நயன்தாராதான் கதாநாயகி. தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஹீரோவாக நடித்திருப்பார்.

இதே கதைதான் விஸ்வாசம். அதில் மகன்.. இதில் மகள் அவ்வளவுதான் வித்தியாசம். ஆனால், விஸ்வாசம் படத்தில் காட்சிகள் அனைத்தும் வேறு. துளசி வெளியாகி 10 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், அப்படத்தின் உரிமையை வாங்கி சிவா விஸ்வாசத்தை இயக்கியதாக தெரியவில்லை.

எனவே, இந்த விவகாரம் பிரச்சனையை கிளப்புமா? அல்லது ஒன்றுமில்லாமல் போகுமா என்பது போகபோகத்தான் தெரியும்.