இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இவர் அன்னக்கிளி உள்ளிட்ட படங்களின் கதை வசனகர்த்தா செல்வராஜின் மகன் ஆவார் இவர் இயக்கி வரும் படம் துப்பாக்கி முனை.

விக்ரம் பிரபு , ஹன்சிகா இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு இசையமைக்கும் எல்.வி முத்து கணேஷ் பழம்பெரும் இசையமைப்பாளாரான எல் வைத்தியநாதன் அவர்களின் மகன் ஆவார்.

ஏழாவது மனிதன், சந்தியாராகம் உள்ளிட்ட பல படங்களில் எல் வைத்தியநாதனே இசையமைப்பாளர் ஆவார்.

இவரது மகன் எல்.வி முத்து நவீன கால மாற்றத்திற்கேற்ப இசையமைத்து வரும் திரைப்படம்தான் துப்பாக்கி முனை முழுக்க முழுக்க ஆக்சன் படமாக வரும் இந்த படத்தின் இசையை வெளிநாட்டு ஆர்கெஸ்ட்ராவான சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ராவுடன் சேர்ந்து இசையமைத்துள்ளார் எல்.வி முத்து .