மிஷ்கினின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, பாக்யராஜ், ஆண்டிரியா, சிம்ரன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்து சமீபத்தில் வெளியான படம் துப்பறிவாளன்.

ஒரு துப்பறியும் நிபுணராக விஷால் நடித்துள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. மேலும் துப்பறிவாளன் படத்தின் அடுத்த பாகத்தை விரைவில் தொடங்குவோம் என விஷால் கூறியுள்ளார்.

இந்நிலையில், இப்படம் வெளியான கடந்த 4 நாட்களில், சென்னையில் இப்படம் ரூ. 1.67 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படம் வெளியான வியாழக்கிழமை அவ்வளவு வரவேற்பு இல்லாவிட்டாலும், வெள்ளிக்கிழமை முதல் வசூல் அதிகரித்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக, பள்ளிகளில் காலாண்டு விடுமுறை அளித்திருப்பதால், நிறைய குழந்தைகள் இப்படத்தை பார்க்க விரும்புகின்றனர் எனவும், முக்கியமாக ஏ செண்டர் எனப்படும் நகரப் பகுதிகளில் இப்படம் நல்ல வசூலை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, நாட்கள் செல்ல செல்ல இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.