விஷாலுக்கு காயம்: துப்பறிவாளன் படப்பிடிப்பில் பரபரப்பு

08:22 மணி

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் துப்பறிவாளன் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.  இந்தப்படப்பிடிப்பில் விஷாலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.  இதன் படப்பிடிப்பு கடலூாில் சுற்றி பிச்சாவரம், சிதம்பரம் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

துப்பறிவாளன் படத்தை விஷால் பிலிம் பேக்டாி நிறுவனம் தான் தயாாிக்கிறது. இதில் அவருக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறாா். மேலும் பிரசன்னா, கே. பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனா். இதன் Jபடப்பிடிப்பு சிதம்பரம் பகுதியில் இன்று நடைபெற்றது. விஷால் சண்டைக்காட்சியில் நடித்து கொண்டிருந்தாா். கயிறு கட்டி விஷால் நடித்துக் கொண்டிருந்தாா். அப்போது திடீரென யாரும் எதிா்பாராமல் கயிறு அறுந்து விழுந்தது. இதனால் விஷால் காயமடைந்தாா். இதைத் தொடா்ந்து விஷால் அருகில் இருந்த மருத்துவமனையில் உடனடியாக சோ்க்கப்பட்டாா்.

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com