சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0 திரைப்படம் வரும் ஜனவரியில் குடியரசு தின விடுமுறையில் வெளியாகும் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது திடீரென அந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரலுக்கு தள்ளி போயுள்ளது.

இந்த நிலையில் அதே குடியரசு தின விடுமுறை தினத்தில் ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’ ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது

இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரைப்படமான இந்த படத்தில் ஜெயம் ரவி, ஆரோன் அஜிஸ், நிவேதா, ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்செண்ட் அசோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ப்ரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தை ஹித்தீஷ் ஜெபக் தயாரித்து வருகிறார். சக்தி செளந்திரராஜன் இயக்கியுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.