ஏ.ஆர் ரஹ்மானுக்கு இசைப்புயல் என்ற அடைமொழி உள்ளது. படங்களிலும் ரசிகர்களும் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் என்றுதான் அழைப்பார்கள். ஆஸ்கார் வாங்கினாலும் ஆஸ்கார் நாயகன் என்று அடையாளப்படுத்தப்பட்டாலும் இசைப்புயல் என்ற பெயர்தான் ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை ரஹ்மானின் அடைமொழியாக இருந்து வருகிறது.

இந்நிலையில் ரஹ்மானின் ரசிகர்கள் ஒரு வித்தியாச டுவிட்டை வெளியிட்டுள்ளனர்.

எச்சரிக்கை ரஹ்மான் என்னும் புயல்

செக்க சிவந்த வானம், 2.0, சர்வம் தாள மயம் என்ற இந்த 3 இடத்தில் புயல் மையம் கொண்டுள்ளதால் அனைவரும் பாதுகாப்பான ஹெட்போன்களை பயன்படுத்தி புயலில் இருந்து பாதுகாத்து கொள்ளுங்கள் இந்த வருடம் ரஹ்மான் புயலின் தாக்கம் அதிகம் இருக்குமாம் என்று ரஹ்மானின் தீவிர ரசிகர்கள் டுவிட் செய்துள்ளனர்.