தமிழக அரசு விதித்துள்ள தடையை மீறி பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சட்டசபையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக்கை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்தது. இதைத்தொடர்ந்து பல கடைகள் மற்றும் நிறுவனங்களில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பை வழங்குவதை நிறுத்தி விட்டனர். ஆனாலும், சில இடங்களில் இன்னும் பிளாஸ்டிக் பை கொடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க பாஸ்-  அமைச்சர்களின் அறிவுரையை ஏற்று 'பில்லா பாண்டி' படத்தில் வசனங்கள் நீக்கம்!

இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் பைகளை கொடுக்கும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், அபராதம் விதிக்கும் வகையில் சட்டமசோதாவை அமைச்சர் வேலுமணி இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அதன்படி தடையை மீறி பிளாஸ்டிக் பை வழங்கினால் ரூ.1 லட்சம் வரை அபாரதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க பாஸ்-  'சர்கார்' காட்சிகள் நீக்கம்: சன்பிக்சர்ஸ் தடாலடி அறிவிப்பு!

முதல் முறை தடையை மீறினால் ரூ.25 ஆயிரம், 2ம் முறை ரூ.50 ஆயிரமும், 3ம் முறை ரூ.1 லட்சமும் அபராதமும் விதிக்கப்படும். 4ம் முறையும் மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஜனவரி 1ம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கான தடை விதிப்பு அமுலுக்கு வந்துள்ளது.