தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தை அரசின் பிடிக்குள் கொண்டு வர திட்டம் திட்டப்பட்டு வருவதாக செய்தி கசிந்துள்ளது.

விஷாலுக்கு எதிராக கிளம்பிய சில தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்க கட்டிடத்திற்கு பூட்டு போட்டதும், விஷால் அதை உடைக்க முயல, அவரை போலீஸ் கைது செய்ததும் கடந்த 2 நாட்களில் தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. சங்கத்திற்கு பூட்டு போட்டதையும், விஷால் மீது 2 வழக்குகளின் கீழ் பதிவு செய்ததையும் நீதிமன்றம் கண்டித்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவு படி நேற்று காலை பூட்டு திறக்கப்பட்டது.

இதையும் படிங்க பாஸ்-  கஜா புயல் கூஜா புயல் ஆனது - அடடே ராஜேந்திர பாலாஜி

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி நடப்பதாக செய்தி கசிந்துள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தில் எப்போதும் பஞ்சாயத்துக்கு குறைவில்லை. அதிலும், அனைவரும் உட்கார்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல், ஒரு குழு முதல்வரை சந்தித்து மனு கொடுக்கும் பழக்கம் இருக்கிறது.

இதையும் படிங்க பாஸ்-  நான் சிங்கிள்தான் பட் டேக்கன் – த்ரிஷாவின் காதலர் யார் ?

விஷால் விவாகரத்தில் கூட சங்கத்திற்கு பூட்டு போட்டு விட்டு, பாரதிராஜா தலைமயில் சிலர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து விஷாலுக்கு எதிராக மனு கொடுத்தனர். சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்டிருந்த ரூ.7 கோடி பணத்தை விஷால் முறைகேடாக செலவு செய்துவிட்டதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். அதன்படி, மாவட்ட பதிவாளர் இதுபற்றி விரைவில் விசாரணை நடத்தவுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த விஷால் - எதற்கு தெரியுமா?

அடிக்கடி பஞ்சாயத்து ஏற்பட்டு சங்க பிரச்சனைகளை அரசு கையில் எடுத்திருப்பதால், விரைவில் சங்கத்தையே அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.