தமிழக மக்களின் இன்றைய டிரண்டிங் வார்த்தை என்னவென்றால் பிக்பாஸ்தான். எந்த வேலையாக இருந்தாலும் அனைவரும் தினமும் 9 மணிக்கு தொலைக்காட்சி முன் ஆஜராகிவிடுகின்றனர்.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 6 பேர் எலிமினேஷனாகி விட்டனர். தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு மேலும் ஒரு நடிகை வருவதாக தெரிகிறது. நேற்று வெளியான ப்ரமோ வீடியோவில் பல்லாக்கில் அந்த நடிகை வந்து இறங்குவது போல காட்சி வெளியானது. யார் அந்த நடிகை என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய  நிலையில் அந்த நடிகை யார் என்று தற்போது தெரியவந்துள்ளது. நடிகை பிந்து மாதவிதான் அவர் என்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.  எது எப்படியோ? இன்று இரவு அதற்கான விடை தெரியத்தான் போகிறது.