மேஷம்
புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே.மயில் நீலம்
ராசி பலன்கள்

ரிஷபம்
பழைய இனிய சம்பவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன்.மஞ்சள்
ராசி பலன்கள்

மிதுனம்
குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். அரசாங்கத்தாலும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ்.ப்ரவுன்
ராசி பலன்கள்

கடகம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் அமைதி நிலவும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வைலெட்.இளஞ்சிவப்பு
ராசி பலன்கள்

சிம்மம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். பூரம் நட்சத்திரக்காரர்கள் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை.ப்ரவுன்
ராசி பலன்கள்

கன்னி
குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர். நண்பர்களுடன் மனத்தாங்கல் வந்துச் செல்லும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மறைமுக பிரச்னைகள் வந்துச் செல்லும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள்.பிங்க்
ராசி பலன்கள்

துலாம்
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே.ப்ரவுன்
ராசி பலன்கள்

விருச்சிகம்
உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பழைய உறவினர். நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வீடு. வாகனத்தை சீர் செய்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு.பச்சை
ராசி பலன்கள்

இதையும் படிங்க பாஸ்-  இன்றைய ராசிபலன்கள் 09/11/2018

தனுசு
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உடல் நலம் சீராகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மெரூண்.ப்ரவுன்
ராசி பலன்கள்

மகரம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மெரூண்.ஆரஞ்சு
ராசி பலன்கள்

கும்பம்
பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: கிரே.மஞ்சள்
ராசி பலன்கள்

மீனம்
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர். நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு.ஊதா
ராசி பலன்கள்