இன்றைய ராசிபலன்கள் 17/03/2018

மேஷம்
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை,ஆரஞ்சு
ராசி பலன்கள்

ரிஷபம்
உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்:வெள்ளை,நீலம்
ராசி பலன்கள்

மிதுனம்
கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே,மயில் நீலம்
ராசி பலன்கள்

கடகம்
மதியம் 1.32 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் திட்டமிடாத செலவுகளையும், பயணங்களையும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன்,மஞ்சள்
ராசி பலன்கள்

சிம்மம்
குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்கள். மதியம் 1.32 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானம் தேவை. அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்:ரோஸ்,ப்ரவுன்
ராசி பலன்கள்

கன்னி
கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு,கிரே
ராசி பலன்கள்

துலாம்
மற்றவர்களை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்கக் கூடாது என்ற முடிவுக்குவருவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:ரோஸ்,கிளிப் பச்சை
ராசி பலன்கள்

விருச்சிகம்
எதிர்பார்த்தவரிடமிருந்து உதவிகள் கிடைக்காவிட்டாலும் எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் நிம்மதி கிடைக்கும். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:வெளிர் மஞ்சள்,ப்ரவுன்
ராசி பலன்கள்

தனுசு
கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் சொந்த&பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்:ஆலிவ் பச்சை,வெள்ளை
ராசி பலன்கள்

மகரம்
உற்சாகமாக இருப்பீர்கள். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். நேர்மறை எண்ணம் பிறக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்-. அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்:அடர் சிவப்பு,இளம்மஞ்சள்
ராசி பலன்கள்

கும்பம்
மதியம் 1.32 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி சூழ்நிலை உருவாகும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்:அடர் சிவப்பு,இளம்மஞ்சள்
ராசி பலன்கள்

மீனம்
குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். உறவினர், நண்பர்களால் சங்கடங்கள் வரும். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மதியம் 1.32 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எச்சரிக்கை தேவைப்படும் அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன்,கிரே
ராசி பலன்கள்