மேஷம்
உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். நெருங்கியவர்கள் சிலருக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
ராசி பலன்கள்

ரிஷபம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதுப் பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
ராசி பலன்கள்

மிதுனம்
மதியம் 1.27 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
ராசி பலன்கள்

கடகம்
குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மதியம் 1.27 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அலைச்சலுடன் ஆதாயம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
ராசி பலன்கள்

சிம்மம்
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
ராசி பலன்கள்

கன்னி
குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
ராசி பலன்கள்

துலாம்
எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
ராசி பலன்கள்

விருச்சிகம்
குடும்பாத்தாருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
ராசி பலன்கள்

தனுசு
இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
ராசி பலன்கள்

மகரம்
மதியம் 1.27 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் புது முதலீடுகளை தவிர்க்கவும். கணவன் -மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார் தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
ராசி பலன்கள்

கும்பம்
குடும்பத்தினருடன் விவாதங்கள் வந்துப் போகும். அநாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். மதியம் 1.27 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
ராசி பலன்கள்

மீனம்
பெரியோரின் ஆசி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
ராசி பலன்கள்