இன்றைய ராசிபலன்கள் 24/02/2018

மேஷம்
வேறுபட்ட யோசனைகள் மனதில் உதிக்கும் நாள் இது குழந்தைகளின் பிடிவாதத்தை சாதுர்யமாக சரி செய்வீர்கள். அழகு, இளமை அதிகரிக்கும். வருமானம் திருப்தி தரும். விலையுயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வணிகம் சூடுபிடிக்கும். வேலையில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்:ரோஸ், கிளிப் பச்சை
ராசி பலன்கள்

ரிஷபம்
இரவு 7.42 மணி வரை சந்திரன் ராசிக்குள் இருப்பதால் கடந்த காலத்தை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷன் ஆவீர்கள். நல்ல வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்படுவீர்கள். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வணிகத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்:வெளிர் மஞ்சள், ப்ரவுன்
ராசி பலன்கள்

மிதுனம்
கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாருக்காகவும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். உடல் நலத்தில் மிகுந்த கவனம் தேவை. உடன்பிறந்தோர் வகையில் அலைச்சல் இருக்கும். வணிகம் சுமாராக இருக்கும். வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். இரவு 7.42 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனம் தேவை. அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்:ஆலிவ் பச்சை, வெள்ளை
ராசி பலன்கள்

கடகம்
எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் இருக்கும். தாய் தந்தையரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வணிகத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுக்காக பரிந்துப் பேசுவீர்கள். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
ராசி பலன்கள்

சிம்மம்
தன்னம்பிக்கையுடன் பொதுவான வேலையில் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தவர்களால் பயன் அடைவீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோனை செய்வீர்கள். வணிகத்தில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். வேலையில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:ஊதா, ரோஸ்
ராசி பலன்கள்

கன்னி
உங்கள் போக்கில் நிறிய மாற்றம் இருக்கும் . குழந்தைகள் நம்பிக்கை கொடுப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்த வாய்ப்பு. வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வணிகத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். வேலையில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன், கிரே
ராசி பலன்கள்

துலாம்
இரவு 7.42 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. குழந்தைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். வணிகத்தில் பற்றுவரவு சுமார்தான். வேலையில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
ராசி பலன்கள்

விருச்சிகம்
கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துப் போகும். விருந்தினர் வருகை அதிகம் இருக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வணிகத்தில் எதிர்பாராத பணலாபம் உண்டு. வேலையில் மேலதிகாரி ஆதரிப்பார். இரவு 7.42 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனம் தேவை. அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:வெள்ளை, நீலம்
ராசி பலன்கள்

தனுசு
பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். உங்களுடைய கருத்துக்களை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். நெருக்கமானவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வணிகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வேலையில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே, மயில் நீலம்
ராசி பலன்கள்

மகரம்
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம் என்று முடிவெடுப்பீர்கள். சொந்தக்காரர்கள் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பலநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்று மதத்தவர் அறிமுகம் ஆவார்கள். வணிகத்தை விரிவுப்படுத்துவீர்கள். வேலையில் திறமைகள் வெளிப்படும். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன், மஞ்சள்
ராசி பலன்கள்

கும்பம்
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல் உண்டு, இருப்பினும் அதில் ஆதாயமும் உண்டு. சொந்தக்காரர்கள் வருகையால் வீடு உற்சாகம் ஆகும். வணிகத்தில் சில மாற்றம் செய்வீர்கள். வேலையில் பழைய சிக்கல்கள் வந்து பின் தீரும். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:ரோஸ், ப்ரவுன்
ராசி பலன்கள்

மீனம்
திட்டவட்டமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சொந்தக்காரர்கள் முக்கியத்துவம் தருவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வணிககத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வேலையில் பெரிய பொறுப்புகள் தேடி வரும் வாய்ப்பு உண்டு. அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்:வைலெட், இளஞ்சிவப்பு
ராசி பலன்கள்