இன்றைய ராசிபலன்கள் 25/02/2018

மேஷம்
தன்னிச்சையாக ஒருசில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சகோதர சகோதரிகள் உங்கள் நலனில் அதிக அக்கறை கொள்வார்கள் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புது வாகனம் வாங்க வாய்ப்பு. வணிகம் சூடுபிடிக்கும். வேலையில் உயரதிகாரி பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
ராசி பலன்கள்

ரிஷபம்
கடந்த 2 நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். ஆன்மீகா ஈடுபாடு அதிகரிக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வணிகத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். வேலையில் உயரதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
ராசி பலன்கள்

மிதுனம்
ராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாக வேண்டிய நிலை ஏற்படும். உறவினர்களை குறைக் கூற வேண்டாம். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். வணிகத்தில் புதிய முயற்சிகள் வேண்டாம். வேலையில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
ராசி பலன்கள்

கடகம்
ஒரு விஷயத்தை நினைத்து அதிகளவில் குழப்பம் அடைவீர்கள். குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ள முயற்சிக்கவும். உடல் அசதி, சோர்வு வரலாம். சாலைகளில் செல்லும்போது கவனம் தேவை. வேலையில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
ராசி பலன்கள்

சிம்மம்
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பொதுக் காரியங்கள் ஈடுபடுவீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வணிகத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். வேலையில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
ராசி பலன்கள்

கன்னி
உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வணிகத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். வேலையில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
ராசி பலன்கள்

துலாம்
கடந்த 2 நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் நீங்கும். பல நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். சுற்றத்தார்கள் மதிப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வணிகத்தில் லாபம் வரும். வேலையில் உங்கள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
ராசி பலன்கள்

விருச்சிகம்
சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்களுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வணிகத்தில் இழப்புகள் ஏற்படும். வேலையில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
ராசி பலன்கள்

தனுசு
உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். திருமண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். வணிகத்தை பெருக்குவீர்கள். வேலையில் அதிகாரிகளுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
ராசி பலன்கள்

மகரம்
கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வணிகத்தில் பற்று வரவு உயரும். வேலையில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
ராசி பலன்கள்

கும்பம்
கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
ராசி பலன்கள்

மீனம்
நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். புது வேலைக் கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். தாயாருக்கு கை, கால் வலி வந்துப் போகும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
ராசி பலன்கள்