மேஷம்
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம்,ப்ரவுன்
ராசி பலன்கள்

ரிஷபம்
இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்-. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே,பச்சை
ராசி பலன்கள்

மிதுனம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். கணவன்& மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: பிங்க்,க்ரீம் வெள்ளை
ராசி பலன்கள்

கடகம்
குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். லேசாக தலை வலிக்கும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை,மஞ்சள்
ராசி பலன்கள்

சிம்மம்
திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மெரூண்,வெள்ளை
ராசி பலன்கள்

கன்னி
சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம்,பிங்க்
ராசி பலன்கள்

துலாம்
தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களால் நன்மை உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். பயணங்களால் திருப்தி உண்டாகும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் இழந்த உரி மையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை,ரோஸ்
ராசி பலன்கள்

விருச்சிகம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு,க்ரீம்வெள்ளை
ராசி பலன்கள்

இதையும் படிங்க பாஸ்-  'போ.... உறவே.. எனை மறந்து நீ' என வைரலாகும் 'காற்றின்மொழி' பாடல் விடியோ!

தனுசு
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. தாயார் ஆதரித்துப் பேசுவார். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு,கிரே
ராசி பலன்கள்

மகரம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ்,வைலெட்
ராசி பலன்கள்

கும்பம்
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு,ஊதா
ராசி பலன்கள்

மீனம்
எதிர்பார்ப்புகள் தடையன்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கம். புது வேலைக் கிடைக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு,பிங்க்
ராசி பலன்கள்