ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியுள்ள டூ லெட் படத்தின் டிரெய்லர் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது.

சென்னையில் வீடு தேடி அலையும் ஒரு குடும்பம் சந்திக்கும் துயரத்தை அடிப்படையாக வைத்து டூ லெட் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் 100க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு 32 விருதுகளையும், 84 பரிந்துரைகளையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

குறிப்பாக டூ லெட் படம் கடந்த ஆண்டின் சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.