இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, கடந்த 1994ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி கண்ட ‘காதலன்’ படத்தில் ‘என்னவளே’ பாடல் மிகவும் பிரபலமானது. அப்பாடலை, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பேபி என்ற பெண், தெலுங்கில் பாடிய விடியோ ஒன்று நேற்று இணையதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்த விடியோவை பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் தனது முகநுால் பக்கத்தில்  அந்த பெண்ணை பாராட்டியுள்ளார். அதில், அவர் ‘இனிமையா குரல்’ என பதிவிட்டுள்ளார்.

ரஹ்மானின் பாராட்டைத்தொடர்ந்து, குறிப்பிட்ட சில மணிநேரங்களிலே ஏறக்குறைய பன்னிரெண்டு இலட்சம் பார்வையாளர்கள் இந்த விடியோவை பார்த்துள்ளனர். அதனோடு, ஒருசிலர் இவருக்கு  பாட ஒரு வாய்ப்பு தாருங்கள் என்ற கோரிக்கையும் விடுத்திருந்தனர்.

இதனையடுத்து, இந்த பேபி பெண்ணுக்கு, தெலுங்கு பிரபல இசையமைப்பாளர் கோடேஷ்வரராவ் பாட வாய்ப்பு கொடுத்துள்ளார். இவரைப்போலவே, ஏ.ஆர்.ரஹ்மானும் பாட வாய்ப்பு கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.