Home சற்றுமுன் நாளை வெளியாகும் படங்கள்!

நாளை வெளியாகும் படங்கள்!

ஒவ்வொரு வாரமும் புதிய படங்கள் எத்தனை வெளியாகும் என்று ரசிகா்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏனெனில் அந்த வார விடுமுறையை எந்த படத்தை பார்த்து போக்கலாம் என்று எண்ணி விழி வைத்து காத்திருக்கம் ரசிகா்களின் எதிர்பார்ப்பை பூா்த்தி செய்யும் வகையில் கடந்த வாரம் வெளியான தமிழ் படம் 2 போக்கியது. ஆறு நாட்கள் கடுமையாக உழைத்து வார விடுமுறையில் மனதார சிரித்து விட்டு வரும் படியாக அமைந்தது சிவா நடித்த தமிழ்படம்2. அது போல இந்த வாரம் வெளியாகும் படங்கள் என்னனென் என்று பார்க்கலாம்.

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி படம் ஒன்று இந்த வாரம் வெளியாக உள்ளது. விஜய் சேதுபதி படம் என்றாலே அதில் நிச்சயம் காமெடி படமாக தான் இருக்கும். அவரும் தனது ரசிகபெருமக்களை ஏமாற்ற மாட்டார் என்பதால் அவரது படத்தை நம்பி பார்த்து விடலாம். விஜய்சேதுபதி நடிப்பில் ஜூங்கா படம் நாளை வெளியாக உள்ளது. இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமரா படத்தை இயக்கிய இயக்குனரின் அடுத்த படைப்பு தான் ஜூங்கா படம். அந்த படத்தை எப்படி ரசித்து சிரித்து மகிழ்ந்தோம் அதுபோல தான் இந்த படமும் இருக்கும் என்பதை மறுக்க முடியாது. இதில் கஞ்சதனமான டானாக நடித்துள்ளார் விஜய்சேதுபதி.

அடுத்தபடம் மோகினி வெளியாக உள்ளது. திரிஷா நடித்துள்ள இந்த படமானது நாளை முதல் ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் திரிஷா இந்த த்ரில்லர் மூவி படத்தில் மிரட்ட இருக்கிறார்.மாதேஷ் இயக்கி உள்ள இந்த படத்தில் திரிஷா, யோகிபாபு, பூா்ணிமா பாக்கியராஜ் நடித்துள்ளனர்.

அடுத்து மூன்றாவது படமாக பிரம்மபுத்திரா படம் வெளியாக உள்ளது. ரொமான்ஸ் த்ரில்லர் இயக்குனரான தாமஸ் இந்த படத்தை இயக்கி உள்ளார். இதில் நாயகியாக உதயதாராவும், நாயகனாக முரளி நடித்துள்ளார். தாமஸ் இயக்கி உள்ள பிரம்மபுத்திரா படத்தை தினேஷ் பாபு தயாரித்துள்ளார்.

விஜய் டிவி புகழ் சரவணன் மீனாட்சி நாயகன் கவின் நடித்துள்ள படம் நட்புன்னா என்னானு தெரியுமா நாளை வெளியாக உள்ளது. இதில் ரம்யா நம்பீசன், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இது நட்பை பற்றிய படம். நட்பைப் பற்றி ஏராளமான படங்கள் வந்தாலும் இந்த படமும் நட்பை வெளிப்படுத்தும் விதமாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது