Sivakarthikeyan’s Mr.Local : ‘சீமராஜா’ படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘Mr.லோக்கல்’. இந்த படத்தை பிரபல இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார்.

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்கிறார். ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிக்கும் இதற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட டீசர் மற்றும் சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை வருகிற மே 1-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, இந்த படத்தில் கார்த்தி, ஆர்யா, ஜீவா, ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் உதயநிதி ஸ்டாலின் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.