கொடநாடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

2017ம் ஆண்டு மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். சில ஆவணங்களையும் மர்ம நபர்கள் எடுத்து சென்றனர். இதில் ஜெ மற்றும் சசிகலாவின் கார் ஓட்டுனராக இருந்த கனகராஜ் மூளையாக செயல்பட்டதும், கேரளாவிலிருந்து சிலரை வரவழைத்து அவர் இந்த கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. ஆனால், அதன்பின் கனகராஜ் கார் விபத்தில் மரணமடைந்தார். சயன் என்பவர் விபத்தில் படுகாயமடைந்து உயிர் தப்பினார். அந்த விபத்தில் சயனின் மனைவி, குழந்தை ஆகியோர் பலியாகினர். அதேபோல், கொடநாடு எஸ்டேட்டின் சிசிடிவி பராமரிப்பாளராக இருந்த தினேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டார்

இதையும் படிங்க பாஸ்-  இப்போ சாவித்ரி; அடுத்தது ஜெயலலிதாவா?

சாமுவேல் மேத்யூஸ் வெளியிட்ட ஆவண படத்தில், கொடநாட்டில் இருந்த ஆவணங்களை எடுத்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தன்னிடம் கனகராஜ் கூறியதாக சயன் வாக்குமூலம் அளித்துள்ளார். எனவே, இந்த சம்பவங்கள் அனைத்தின் பின்பும் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாக அந்த வீடியோவில் கூறப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் பூதாகரம் ஆகியது. கொடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தினகரன் உட்பட பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக தெகல்கா மேத்யூஸ் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிங்க பாஸ்-  ஜெயலலிதாவுக்கு மோடியே பயப்படுவார் - சி.வி.சண்முகம் இப்படி பேசலாமா?

இதையடுத்து, நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மேத்யூஸ் “கொடநாடு கொலை வழக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் கொலையாளி. இந்த வருடம் அவர் வெளியே இருக்கிறார். அடுத்த வருடம் பொங்கலுக்கு அவரை சிறையில் சென்று சந்திப்பேன்” என அவர் கோபத்துடன் நேற்று பேட்டி கொடுத்தார்.

இதில் தொடர்புடைய சயன் மற்றும் மனோஜ் ஆகியோரை டெல்லி போலீசார் கைது செய்தனர். அதன்பின் அவர்கள் தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை சிலர் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றுவிட்டதாக நேற்று இரவு மேத்யூஸ் வீடியோ வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தன்னை கைது செய்யவும் போலீசார் முயன்று வருவதாக மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தபாடல்

இந்நிலையில், கொடநாடு கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என டிராஃபிக் ராமசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர் சார்பாக தேமுதிக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.