விழுப்புரத்தை சேர்ந்த திருநங்கை அபிராமி இன்று தேசிய நெடுஞ்சாலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தை அடுத்த ஐயங்கோவில்பட்டு என்ற கிராமத்தில் வசித்தவர் திருநங்கை அபிராமி. 36 வயதான இவர் இன்று விழுப்புரம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அபிராமியின் சடலத்தி மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள நிலையில் திருநங்கை அபிராமி தலையில் கல்லை போட்டு கொள்ளப்பட்டிருப்பதை தெரிந்துக்கொண்டனர். முதற் கட்ட விசாரணையில் காரில் சில மர்ம நபர்கள் வந்ததாகவும் அவர்கள்தான் அபிராமியை கொன்றதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், திருநங்கை அபிராமியின் உடல் நெடுஞ்சாலையில் இருந்ததால் பாலத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என்ர கோனத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிகிறது.