Transgender Sakshi Harendran – விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள சீசன் 3 நிகழ்ச்சியில் சிங்கப்பூரை சேர்ந்த திருநங்கை கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 1 மற்றும் 2 வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது பிக்பாஸ் 3வது சீசன் விரைவில் வெளியாகவுள்ளது.இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். எனவே, இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்குள்ளே யார் யார் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த முறை கலந்து கொள்ளப்போகும் பிரபலங்களில் பட்டியலும் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  சேரனின் நாயகியிக்கு இப்படியொரு நிலைமை?

இந்நிலையில், சிங்கப்பூரை சேர்ந்த திருநங்கை சாக்‌ஷி ஹரேந்திரன் பெயரும் அடிபட்டு வருகிறது இவர் கடந்த சில நாட்களாகவே, பெண் குரலில் பாடல்கள் பாடி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை பெற்று பிரபலமடைந்து வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பாடியுள்ளார். மேலும், டப்ஸ்மாஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.