உத்தர பிரதேசத்தில் போலிஸ் ஸ்டேஷனுக்குள்ளாகவே சண்டை போட ஆரம்பித்த திருநங்கைகளைப் போலிஸார் கடுமையாகத் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

உத்தர பிரதேசம் மீரட்டில் பல திருநங்கைகள் குழுக்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள கடைகளுக்கு சென்று வியாபாரிகளை ஆசிர்வாதம் செய்து அவர்களிடம் பணம் மற்றும் பரிசுப் பொருட்களைப் பெற்று தங்கள் வாழ்வை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க பாஸ்-  எடப்பாடி பழனிசாமியை 6 முறை கைது செய்த திமுக: சட்டசபையில் முதல்வர் தகவல்!

இது மாதிரிக் கடைகளுக்கு செல்வதில் இருக் குழுக்களுக்கு இடையே பிரச்சனை வெடித்துள்ளது. இதனால் சாலையிலேயே இரண்டு குழுக்களும் சண்டையிட ஆரம்பித்துள்ளனர். பொதுமக்கள் போலிஸ்ல் இதுபற்றிப் புகார் கொடுக்க இரு குழுக்களில் உள்ளவர்களையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர் போலிஸ்

இதையும் படிங்க பாஸ்-  முதல் திருமணத்தை மறைத்து வேறு திருமணம்: கலக்கபோவது யாரு நவீன் மீது மனைவி புகார்

ஆனால் போலிஸ் ஸ்டேஷனுக்குள்ளும் சென்ற அவர்கள் சண்டையிடுவதை நிறுத்தவில்லை. இதனால் போலிஸார் இருத் தரப்பையும் கட்டி வைத்த பிரம்பால் அடித்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.