Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட டிரிகர் சக்தி

பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட டிரிகர் சக்தி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரியும் சக்தியும் சேர்ந்து கொண்டு செய்த நாட்டாமைத்தனத்தால் பலர் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக இருவரும் ஓவியாவை கார்னர் செய்து அவரது மனநிலை மாற்றத்திற்கும் காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சக்திக்கு தற்போதுதான் தனக்கு எந்த அளவுக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு உள்ளது என்பதை புரிந்துள்ளார். குறிப்பாக பெண்கள் குறித்து அவர் பேசிய கருத்துக்களுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளதையும் அவர் அறிந்துள்ளார்.

இந்த நிலையில் சக்தி தனது ஃபேஸ்புக்கில் பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டு ஒரு பதிவை செய்துள்ளார். பெண்களை தான் என்றும் மதிப்பவன் என்றும், பெண்களுக்கு எதிராக தான் என்றுமே பேசியதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த பதிவின் கமெண்ட் பாக்ஸில் ஓவியா ஆர்மியினர் கடுமையான சொற்களை கொண்டு அவரை விமர்சனம் செய்ததால் உடனே அந்த பதிவை அவர் நீக்கிவிட்டார்.