குற்றப்பயிற்சி படத்தில் ஏற்கனவே நடிகை திரிஷா டிடெக்டிவ் பெண்ணாக நடிக்க உள்ளார் என்பது தெரிந்த செய்தி. தற்போது அந்த படத்தில் நடிகை பிரியாமணியும் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இயக்குநா் பாலாவின் உதவியாளர் வொ்னிக் இயக்குநராக அவதாரம் எடுக்கும் குற்றப்பயிற்சி படத்தில் திரிஷா நடிக்க உள்ளார். அந்த படத்தில் புதியதாக பிரியாமணி முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் நீண்ட காலமாக நாயகியாக உள்ள திரிஷா நயன்தாராவை போல கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தோ்வு செய்து நடித்து வருகிறார். அந்த மாதிரி கதையம்சம் உள்ள படங்களான மோகினி, கா்ஜனை படங்களில் நடித்து வருகிறார். தற்போது அந்த வரிசையில் உருவாகும் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் கமிட்டாகியுள்ளார்.

அப்படி திரிஷா நடிக்கவிருக்கும் இந்த படத்திற்கு குற்றப்பயிற்சி என்ற பெயரில் படம் தயாராகி வருகிறது. உண்மையான சம்பவத்தை கருவாக வைத்து உருவாகி வரும், முதல் பெண் துப்பறிவாளா் படம் இது தான் என்று கூறப்படுகிறது. விரைவில் படப்பிடிப்பு ஆரம்ப உள்ள நிலையில் இந்த படத்தை ஸ்ரீ குரு ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.விவேகானந்தன் தயாரிக்கிறார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க பிரியாமணி ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. பருத்திவீரன் படத்தின் மூலம் புகழ் பெற்ற பிரியாமணி திருமணத்திற்கு பிறகு நடிக்கும் முதல் படம் இது.