தமிழ் சினிமாவில் கடந்த 15 வருடங்களாக நாயகிகளாக நடித்து கொண்டிருப்பவர்கள் த்ரிஷாவும் நயன்தாராவும் மட்டும்தான். இவர்களுடன் நடித்த பல நடிகைகள் அக்கா, அம்மா, கேரக்டர்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் ரஜினி நடிக்கவுள்ள கார்த்திக் சுப்புராஜ் படத்திலும், கமல் நடிக்கவுள்ள ‘இந்தியன் 2’ படத்திலும் நாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற த்ரிஷா, நயன்தாரா இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினியுடன் ஏற்கனவே சந்திரமுகி படத்தில் நடித்த நயன்தாரா மீண்டும் நடிக்கவும், கமலுடன் முதல்முறையாக நடிக்கவும் அவரே முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் கமலுடன் மன்மதன் அம்பு, தூங்காவனம் ஆகிய படங்களில் நடித்த த்ரிஷா மீண்டும் அவருடன் நடிக்கவும், இதுவரை ரஜினியுடன் நடிக்காததால் அவருடன் முதல்முறையாக நடிக்கவும் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.