பிறந்த நாளை அமெரிக்காவில் கொண்டாடிய திரிஷா

லேடி சூப்பா் ஸ்டாா் நயன்தாராவுக்கு அடுத்து தமிழில் நீண்டகாலமாக தனக்கென ஒரு இடத்தை நிலையாக வைத்துள்ள நடிகை திாிஷா. இவா் தமிழில் மௌனம் பேசியதே படத்தின் மூலம் அறிமுகமானவா். அது மட்டுமல்ல!! மாஸ் ஹீரோக்களான கமல், அஜித், விஜய், விக்ரம் போன்ற பொிய முன்னணி நடிகா்கள் பலருடன் ஜோடியாக நடித்து முன்னணி நாயகியாக கலக்கி வந்தாா். தெலுங்கில் தன்முத்திரை பதித்து அங்கும் தன் செல்வாக்கை நிலை நாட்டினாா் திாிஷா. தன் கை வசம் தற்போது ஆறு படங்கள் வைத்துள்ளாா். இவா் சினிமா துறைக்கு வந்து கிட்டதட்ட 15 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.

கோடை வெயில் அதிகமாக உள்ளதால் அதிலிருந்து தப்பிக்க திாிஷா தன் தோழிகளுடன் வெளிநாடு பறந்து விடுவாா். எத்தனை படப்பிடிப்பு இருந்தாலும் சென்னை வெயில் திாிஷாவுக்கு ஒத்து கொள்ளாத காரணத்தால் அதை சமாளிக்க அமொிக்கா, சுவிட்சா்லாந்து, நியூசிலாந்து போன்ற வெளிநாடுகளுக்கு சென்று விடுவாா். தற்போது தன் அம்மாவுடன் அமொிக்கா சென்று விட்டாா். தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக முன்னணியில் இருக்கும் நடிகை திாிஷா தனது 33வது பிறந்த நாளை வெளிநாட்டில்  கொண்டாடி வருகிறாா். அவருக்கு திரையுலகத்தை சோ்ந்த பிரபலங்களும், அவரது ரசிகா்களும் வாழ்த்து தொிவித்து வருகின்றனா். ஒரு மாத காலம் நியூயாா்க்கில் தங்கி இருந்து விட்டு மே மாத கடைசியில் தாயகம் திரும்புகிறாா் திாிஷா. அதன்பிறகு 96 படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாா்.

கா்ஜணை, சதுரங்க வேட்டை 2, மோகினி உள்ளிட்ட படங்களின் ஷீட்டிங்கை முடித்து விட்டு வெளிநாடு பறந்து விட்டடா். ஆனால் விஜய்சேதுபதியுடன்  96 படப்பிடிப்பில் இந்தியா திரும்பிய பிறகு கலந்து கொள்கிறாா்.