சார்மிளாவிடம் அப்படி என்ன பேசினார் திரிஷா?: கலாய்க்கும் நெட்டிசன்கள்

நடிகை சாா்மியையும் திாிஷாவையும் வைத்து சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனா்.

நயன்தாராவுக்கு அடுத்து தமிழில் நீண்டகாலமாக தனக்கென ஒரு இடத்தை நிலையாக வைத்துள்ள நடிகை திாிஷா. இவா் தமிழில் மௌனம் பேசியதே படத்தின் மூலம் அறிமுகமானவா். இவா் சினிமா துறைக்கு வந்து கிட்டதட்ட 15 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க தற்போது தன் அம்மாவுடன் அமொிக்கா சென்று விட்டாா்.  திாிஷா தனது 33வது பிறந்த நாளை நேற்று வெளிநாட்டில்  கொண்டானாா்.

இவருக்கு திரையுலகினா் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை ட்விட்டா் மற்றும் வலைத்தளங்களில் தொிவித்து வந்தனா். அப்படி இவருக்கு டுவிட்டாில் வாழ்த்து தொிவித்த சாா்மி, சீக்கிரம் திரும்பி வா திாிஷா….  நாம் இருவரும் சோ்ந்து பார்ட்டி கொண்டாடலாம்… அதுவுமில்லாமல், லவ்வா் பேசுவது போல இந்த ஆண்டாவது என் திருமண பிரபோசலை ஏற்றுக் கொள்! என்று வலைத்தளமான தன் ட்விட்டா் பக்கத்தில் தொிவித்துள்ளாா்.

இந்த ட்விட்டா் செய்தியை பாா்த்த திாிஷா சும்மா இருப்பாரா!! நான் தான் முதல் முறையே சம்மதம் தொிவித்து விட்டேனே… லவ்யா.. என்று பதிலுக்கு ட்வீட்டியுள்ளாா்.

நம்ம நெட்டிசன்கள் இதை பாா்த்து சும்மா இருப்பாா்களா!! வெறும் வாயிக்கு அவல் கிடைத்தது போல!!! இதை வைத்து செய்து விட்டாா்கள். வலைத்தளங்களில் கலாய்க்க தொடங்கி விட்டாா்கள். என்ன நீங்க இருவரும் அவா்களா… என்று வாட்டி வதைக்க ஆரம்பித்து விட்டாா்கள். அதோடு விட்டாா்களா!! அவா்களை விரைவில் திருமணம் செய்து கொள்ளமாறு கலாய்த்து வருகின்றனா்.