நடிகை த்ரிஷா கடந்த 15 ஆண்டுகளாக திரையுலகில் நாயகியாக உள்ளார். இவருடன் நடித்த நடிகைகள் அக்கா, அம்மா வேடத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையிலும் இன்னும் இவர் தமிழ்த்திரையுலகில் முன்னணி நாயகியாக உள்ளார்.

இந்த நிலையில் எந்த படத்தில் நடித்தாலும், அந்த படத்தின் கேரக்டருக்காக மெனக்கிடும் த்ரிஷா, தற்போது குத்துச்சண்டை வீராங்கனை கேரக்டரில் நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்திற்காக அவர் தற்போது குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது