பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி – திரிஷா நடித்து வெளியான ’96’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் பள்ளிப்பருவ காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

இந்த படம் முழுவதும் திரிஷா அணிருந்த உடை மிகவும் பிரபலமானது. குறிப்பாக, அவரின் மஞ்சள் நிற சுடிதார் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது. இந்த வருட தீபாவளி ஸ்பெஷலாக ஜானுவாக நடித்த திரிஷாவின் ஆடை விற்பனைக்கு வந்தது.

இந்நிலையில், ரசிகர்கள் பலர் தங்களது செல்ல பிராணிகளுக்கும் ஜானு கெட்டப் போட்டு டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இந்த புகைப்படத்தை திரிஷா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை தற்போது  ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.