நடிகை திரிஷாவும், தொழிலதிபரும், தயாரிப்பாளருமான வருண்மணியனும் ஒருகாலத்தில் காதலர்களாக வலம் வந்தனர். இவர்கள் காதல் இருவருடைய வீட்டுக்கும் தெரியவர பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தமும் செய்துகொண்டனர். ஆனால், திடீரென இவர்களுடைய திருமணம் நின்றுவிட்டது. அதன்பிறகு, அவரவர் தங்கள் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில், வருண்மணியன், கனிகா குமரன் என்பவரை திருமணம் செய்துகொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கனிகா குமரன் மறைந்த முன்னாள் அமைச்சர் கே.பி.கந்தசாமியின் பேத்தி ஆவார். இவர்களது திருமணம் வரும் அக்டோபர் மாதம் சென்னையில் நடக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

வருண்மணியன் தமிழ் சினிமாவில் ‘வாயை மூடி பேசவும்’, ‘காவியத்தலைவன்’ உள்ளிட்ட சில வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலும் இவருக்கென்று தனி முத்திரையை பதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.