தோழிகளிடம் கூட சொல்லாமல் அமெரிக்கா பறந்த திரிஷா

வெயில் கொடுமை தாங்க முடியாததால்  நடிகை திரிஷா தனது தோழிகளுடன்கூட செல்லாமல் அமெரிக்கா பறந்தார்.

நடிகை திரிஷா தற்போது கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, மோகினி ஆகிய 3 படங்களையும் முடித்துக் கொடுத்துவிட்டார்.  அடுத்து விஜய் சேதுபதியுடனான படம் ஜூன் மாதம் துவங்குகிறது.

தமிழகத்தில் தற்போது வெயில் சுட்டெரித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தனது தாயுடன் திரிஷா அமெரிக்கா பறந்தார். வழக்கமாக கோடைகாலத்தில் தனது தோழிகளுடன் வெளி நாடுகளுக்கு சென்று வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தோழிகளுக்கு கூட சொல்லாமல் தாயுடன் அமெரிக்கா சென்றார். ஒரு மாத அதன் பிறகு 96 படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.