த்ரிஷாவின் திடீர் முடிவு ஏன்? சாமி 2′ படக்குழுவினர் அதிர்ச்சி

சீயான் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கி வந்த ‘சாமி 2’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து வெகுவிரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ள நிலையில் இந்த படத்தின் நாயகிகளில் ஒருவரும், இந்த படத்தின் முதல் பாக நாயகியுமான த்ரிஷா திடீரென படத்தில் இருந்து விலகிவிட்டார். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தனக்கு இந்த படத்தில் கூடுதல் முக்கியத்துவம் வேண்டும் என்று த்ரிஷா வற்புறுத்தியதாகவும், ஆனால் இந்த படத்தின் நாயகி கீர்த்திசுரேஷ் என்பதால் அவருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் த்ரிஷாவுக்கு கொடுக்க முடியாது என்று ஹரி மறுத்துவிட்டதாலும் த்ரிஷா இந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது

இருப்பினும் படத்தில் இருந்து விலகினாலும் வெறுப்பை மனதில் வைத்து கொள்ளாமல், படக்குழுவினர்களுக்கு தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் த்ரிஷா