கயிற்றில் தொங்கிய திரிஷா: அதிர்ச்சியடைந்த அவரது அம்மா

தமிழ் திரையுலகில் இளைஞர்களின் கனவு கன்னியாக இன்றும் திகழ்பவர் திரிஷா. காரணம் அவர் நடித்த பெரும்பாலான படங்களில் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாத்திரங்களே.ஆனால் கொடி படம் அவரது இமேஜை மாற்றியது. அதில் அவர் ஏற்றிருந்த அந்த வில்லி வேடம் அனைவராலும் ரசிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு ஆக்சன் கலந்த வேடங்கள் வரத் தொடங்கின.

அந்த வகையில் திரிஷா நடிக்கும் கர்ஜனை படத்தில் பக்கா ஆக்சன் வேடம் அவருக்கு. அதில் ஒரு சணடைக் காட்சியில் கயிறில் தொங்கியபடி திரிஷா நடிதத்தை பார்த்த அவரது அம்ம அதிர்ச்சி அடைந்தாராம். அந்த காட்சி படமாக்கும்வரை கடவுளை வேண்டிக்கொண்டே இருந்தாராம்.