மீண்டும் ஜெஸ்ஸி கேரக்டரில் த்ரிஷா

த்ரிஷாவின் திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத கேரக்டர் என்றால் அது ‘விண்ணை தாண்டி வருவாயோ’ படத்தின் ஜெஸ்ஸி கேரக்டர்தான். இதேபோன்ற கேரக்டரில் மீண்டும் நடிக்க மாட்டோமா என்று ஏங்கிக்கொண்டிருந்த த்ரிஷாவுக்கு மீண்டும் கிட்டத்தட்ட அதே போன்ற கேரக்டர் கிடைத்துள்ளது.

நிவின்பாலி நடிக்கும் மலையாள படமான ஹே ஜூட்’ என்ற படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் கேரள கிறிஸ்துவ பெண்ணாக நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

விடிடி படம் போலவே ரொமான்ஸ் மற்றும் உணர்ச்சி மிகுந்த காட்சிகள் இந்த படத்தில் அதிகம் இருப்பதால் இந்த படத்தில் தன்னுடைய நடிப்புத்திறமையை முழு அளவில் வெளிப்படுத்தும் வாய்ப்பு தனக்கு கிடைத்துள்ளதாக த்ரிஷா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.