நடிகை த்ரிஷா தான் யாரையாவது காதலிக்கிறாரா என்பது குறித்த கேள்விக்கு சூசகமாக பதில் அளித்துள்ளார்.

ஜோடி படத்தில் துணைநடிகையாக அறிமுகமான த்ரிஷா கிட்டத்தட்ட 20 வருடங்களாக தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களில் கதாநாயகியாக  50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்.. தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து  முன்னணி நாயகர்களோடும் ஜோடி சேர்ந்துவிட்ட திரிஷா இப்போது நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் அதிகமாக நடித்து வருகிறார்.

இதையும் படிங்க பாஸ்-  தோழிகளிடம் கூட சொல்லாமல் அமெரிக்கா பறந்த திரிஷா

அவரின் சகநடிகைகள் பலர் திருமணம் ஆகி அண்ணி, அக்கா என குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துவரும் நிலையில் இன்னமும் முன்னனிக் கதாநாயகியாக தாக்குப்பிடித்து வருகிறார். அண்மையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள ராங்கி படத்தின் போஸ்டரை டிவிட்டரில் வெளியிட்டு ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

இதையும் படிங்க பாஸ்-  விஜய் ரசிகர் விஷாலுக்கு வில்லனா? புதிய தகவல்

அப்போது ஒரு ரசிகர் உங்கள் லவ் ஸ்டேட்டஸ் என்ன எனக் கேள்வி எழுப்பியதற்கு ‘சிங்கிள் பட் டேக்கன்’ எனப் பதிலளித்தார். இதையடுத்து த்ரிஷாவின் காதலர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக திரிஷா விஷால், ஆர்யா, ராணா மற்றும் தொழிலதிபர் வருண் மணியன் ஆகியோருடன் காதலில் இருந்ததாக கிசுகிசுக்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.