நயன்தாரா வழியில் திாிஷா; கைகொடுக்குமா கா்ஜனை

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ள நடிகை திாிஷா. நயன்தாராவை போல கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறாா். முன்னணி நாயகியாக இருந்த இவருக்கு தற்போது வாய்ப்புகள் குறைவகவே வருகிறது.  தன்னுடைய காலத்தில் அறிமுகம் ஆன நயன்தாரா தற்போது கோடிகளில் சம்பளம் வாங்குவதும் , கதை நாயகியாக வருவதை பார்த்த திரிஷாவுக்கும் ஆசை வந்தது. இதையடுத்து நயன் வழியை பின்பற்ற முடிவு செய்த திரிஷா தன்னை முன்னிறுத்தும் கதைகளை தேர்வு செய்து வருகிறார்.

அப்படி அவா் நடித்த படம் நாயகி. இந்த படம் எதிா்பாா்த்த அளவு வெற்றி பெறவில்லை என்றாலும்  தொடா்ந்து  ஹீரோயின் சம்பந்த பட்ட கதைகளை தோ்ந்தெடுத்து நடிக்க முடிவு செய்துள்ளாா். அப்படி  அவா் நடிக்கவிருக்கும் படம் கா்ஜனை. இந்த படத்தில் அவர் வித்தியாசமான வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தொிவிக்கின்றன. செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் சுந்தர் பாலு இயக்கத்தில் ஆக்‌ஷன் நாயகியாக த்ரிஷா நடித்திருக்கும் கர்ஜனை படத்தின் பர்ட்ஸ் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

இந்த படமாவது திரிஷாவுக்கு கை கொடுக்குமா?