இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நேற்று முதல் சென்னையில் தொடங்கியுள்ளது. இந்த படப்பிடிப்பில் விஜய், சமந்தா, சத்யன், யோகிபாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவும் தற்போது தான் நடித்து கொண்டிருக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் டீசரை தனது பிறந்த நாளான ஜூலை 23ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு 85% முடிந்துவிட்ட நிலையில் டீசர், டிரைலர், பாடல்கள் வெளியீடு, புரமோஷன் என அடுத்தடுத்த விழாக்கள் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

விஜய்யும், சூர்யாவும் அடுத்தடுத்து தங்கள் பிறந்த நாளில் ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் நிலையில் இதே முறையை இன்னும் சில முன்னணி நடிகர்களும் கடைபிடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.