தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்ததையடுத்து அங்கு துப்பாகிச்சூடு நடத்தப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் அதற்கு பிறகும் ஸ்டெர்லைட்டை நடத்தும் வேதாந்தா குழுமம் மீண்டும் ஸ்டெர்லைட்டை திறக்க முய்ற்சி செய்து வருகிறது. திறந்தே தீருவோம் என சவால் விடுக்கும் வகையில் உள்ளது அதன் செயல்பாடுகள். இந்நிலையில் தங்களுக்கு சாதகமாக அலுவலக பணிகளை மேற்கொள்ள அனுமதியை பெற்றுள்ளது ஸ்டெர்லைட் நிர்வாகம்.

ஆனால் இதற்கு தமிழக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளதற்கு தனது வேலூர் பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

வேலூரில் நேற்று பெருவாரியான மக்கள் வெள்ளத்தில் உரையாற்றிய தினகரன் ஸ்டெர்லைட் குறித்து பேசினார். அதில், தூத்துக்குடியில் அமைதியாக, ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடிய சொந்த மக்களை, நாய் சுடுவது போலச் சுட்டு தள்ளியது இந்தத் துரோகிகளின் ஆட்சி. மீண்டும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்துள்ளது. முதல்வர் இளித்துக்கொண்டு இருக்கிறார் என கடுமையாக விமர்சித்தார்.