தூத்துக்குடியில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் ஜாலியன் வாலாபாக் படுகொலை போன்றது எனவும், இது தமிழகத்துக்கு கரும்புள்ளி எனவும் விளாசித்தள்ளியுள்ளது மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள்.

தூத்துக்குடியில் கடந்த மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த 100-வது நாள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க பாஸ்-  தம்பியை சுட்டு கொலை செய்த விஜய் ரசிகர் மன்ற தலைவர்...

காவல்துறை இரண்டு நாட்களாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் 8 பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் தூத்துக்குடியை சேர்ந்த ஹென்றி தாமஸ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார்.

இதையும் படிங்க பாஸ்-  தூத்துக்குடி முன்னாள் ஆட்சியர் வெங்கடேசனிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை!

அதில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை பறிமுதல் செய்ய வேண்டும். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனை விசாரித்த நீதிபதிகள் செல்வம் மற்றும் பசீர் ஆகியோர் ஜாலியன் வாலாபாக் போன்ற தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தமிழகத்துக்கு கரும்புள்ளி என கருத்து தெரிவித்தனர்.