TV Actres Devi kirupa – தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான தேவி கிருபா மீது அவரின் தாய் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆனந்தம், தென்றல் ஆகிய தொடர்களில் நடித்தவர் தேவி கிருபா. தற்போது தொலைக்காட்சி தொகுப்பாளினியாக அவர் பணிபுரிந்து வருகிறார்.

இவரின் தாய் ஸ்வாதி கிரிஜா சமீபத்தில் மதுரவாயல் காவல் நிலையத்தில் ஒரு வாக்குமூலத்தை எழுதி கொடுத்தார். அதில், என் மகள் தேவி கிருபா இறந்துவிட்டதாக நான் நினைத்துக்கொள்கிறேன். எனக்கு இனிமேல் ஒரு ஒரு மகன் மட்டுமே” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக ஒரு வார இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் “ தேவி கிருபா ஊடகத்துறையில் வளர்ச்சியடைய நான் இரவும், பகலும் பாடுபட்டேன். ஆனால், திடீரென என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டாள். எனவே, தர்கா, கோவில் மற்றும் தெருக்களில் வாழ்ந்தேன். தற்போது ஒரு ஆசிரமத்தில் வாழ்கிறேன். என் மகள் என்னை கண்டு கொள்வதே இல்லை. அவள் தனியாக வசிக்க விரும்புகிறாள்” என்பது உள்ளிட்ட பல புகார்களை கூறியுள்ளார்.

இதுபற்றி விளக்கம் அளித்த தேவி கிருபா ‘ நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை என் தாய் அவர் இஷ்டப்படி செலவு செய்தார். எவ்வளவோ பொறுத்துக்கொண்டேன். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் அவர் செய்யும் செலவுகள் பற்றி கணக்கு கேட்டேன். அதற்காக கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்”எனக் கூறியுள்ளார்.

அவரது சகோதரரும் அதை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அம்மா செய்தது தவறுதான். அக்கா வசிக்கும் வீடு கூட அவரின் உழைப்பில் வாங்கியதுதான். நான் என்ன செய்ய முடியும். அம்மாதான் இறங்கி வர வேண்டும்” என புலம்பியுள்ளார்.