நடிகர் கமல்ஹாசன் பகுத்தறிவாளர் என்பதும், கடவுளை நம்ப மறுப்பவர் என்பதும் அனைவரும் அறிந்ததே. இருப்பினும் கடவுளை வணங்குபவர்களை அவர் ஒருபோதும் விமர்சனம் செய்ததில்லை. ஏனெனில் அவரது மகள் ஸ்ருதியே ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர்

இதையும் படிங்க பாஸ்-  அதிமுக நாளிதழின் கேவலமான செயல் – இணையத்தில் பெருகும் கண்டனம் !

இந்த நிலையில் சன் டிவியின் தொகுப்பாளினியும், டிவி தொடர் நடிகையுமான ஐஸ்வர்யா பிரபாகர், கமல்ஹாசனை முருகன் போன்று வரைந்து அதை அவரிடம் காட்டி ஆட்டோகிராப் கேட்டுள்ளார்.

தன்னுடைய உருவத்தை முருகன் மூலம் ரசித்து பார்த்த கமல்ஹாசன் சிரித்தபடியே ஆட்டோகிராப் போட்டுள்ளார். இதனை நடிகை ஐஸ்வர்யா மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்