Home சற்றுமுன் 101 ஏசிகளை வாங்கிவிட்டு பணம் தராமல் மிரட்டிய பிரபல டிவி தொகுப்பாளினி

101 ஏசிகளை வாங்கிவிட்டு பணம் தராமல் மிரட்டிய பிரபல டிவி தொகுப்பாளினி

சினிமா பிரபலங்கள் தான் ஏதாவது பிரச்சனையில் சிக்கி தவிப்படு உண்டு. ஆனால் தற்போது சின்னத்திரை சேர்ந்த பிரபலங்களும், இந்த மாதிரி சிக்கலில் மாட்டி சர்ச்சையில் சிக்குவது அதிகமாக நடந்து வருகிறது. இந்த வரிசையில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி அனிஷா மோசடி வழக்கில் மாட்டியுள்ளார். அவரது கணவரும் அதற்கு உடந்தையாக இருந்துள்ளார். தொகுப்பாளினி அனிஷா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் தான் பிரபல டிவி ஆங்கர் காரை தவறுதலாக ஓட்டி சர்ச்சையில் சிக்கினார். பிரபல டிவியில் டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு பெண் போட்டியாளர் இதுபோன்று குடிபோதையில் கார் ஓட்டியதாக சர்ச்சையில் சிக்கினார்.குடித்துவிட்டு கார் ஓட்டுவது, குடிபோதையில் ஆட்டம் போடுவது என டிவி தொகுப்பாளினிகளாகட்டும், சின்னத்திரை நட்சத்திரங்களாகட்டும் இது போன்ற பிரச்சனையில் மாட்டி அவர்களது பெயர்கள் அவ்வப்போது அடிபட்டுவது நடந்து வருகிறது.

சமீபத்தில் பிரபல சின்னத்திரை நடிகை ஒருவர் பாலியல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அதுபோல தூத்துக்குடி ஸ்டர்டெலைட் ஆலை துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு எதிராக காவல்துறை சீருடையில் இருந்து கொண்டு காவல்துறையை விமர்ச்சித்த சின்னத்திரை நடிகை நிலானி கைது செய்யப்ட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நெசப்பாகத்தை சேர்ந்த அனிஷா என்கிற பூர்ணிமா பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக இருக்கிறார். அனிஷா அவரது கணவருடன் சேர்ந்து வீட்டு உபயோக பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் பிசினஸ் செய்து வருகின்றனர்.இவர்கள் கே.கே நகரில் வீட்டு பொருட்களை வைத்திருக்கும் பிரசாந்த்குமார் நிறுவனத்தில் 101 வீட்டு ஏசிகளை மொத்தமாக வாங்கியுள்ளனர். அவர்கள் வாங்கிய ஏசிக்குரிய தொகையை செக்காக கொடுத்துள்ளார். ஆனால் வங்கி கணக்கில் பணம் இல்லாத காரணத்தால் செக் பவுன்ஸ் ஆகியுள்ளது. இதனால் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பிரசாந்த் அனிஷா மற்றும் அவருடைய கணவரிடம் பணத்தை கேட்டுள்ளார்.

பணத்தை கொடுக்காமல் மறுத்து அனிஷா, உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் எனக் கூறியுள்ளார். பணம் கொடுக்காததால் அவர்கள் மீது கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அனிஷாவை போலீசார் கைது செய்துள்ளனர். தொகுப்பாளினியின் கணவர் சக்திமுருகன் தலைமறைவாகி உள்ளார். இது மட்டுமல்லாமல் இவர்கள் நடத்தி வந்த ட்ராவல்ஸ் ஏஜென்சியிலும் மோசடிகள் நடந்து இருப்பதாக போலீசாருக்கு புகார் கிடைத்துள்ளது. இதனால் காவல்துறை அனிஷாவின் கணவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.