பிரபலங்கள் என்றாலே கொஞ்சம் சிரமம் இருக்கதான் செய்யும். வெளி இடங்களில் ப்ரீயாக பயணம் செய்ய முடியாது. எங்கு சென்றாலும் ரசிக பெருமக்கள் கூடி விடுவார்கள். இதனால் அவா்கள் வெளிநாடுகளுக்கு பறந்து செல்கின்னறனா். அங்கு அவா்களை யாரும் அடையாளம் கண்டு கொள்ளப்போவதில்லை என்ற காரணத்தால் தான் ஹாயாக வெளிநாடு பறக்கின்றனா்.

சின்னத்திரை என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது டிடி. இவரை தெரியாதவா்கள் இல்லை என்றே சொல்லலாம். டிடி முதன்முதலில் சன் தொலைக்காட்சியில் சிறுவா் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமானார். அதன் பின் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாலும் காபி வித் டிடி நிகழ்ச்சி தான் ரொம்ப ஸ்பெஷலானது.

தற்போது எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் கொஞ்சம் ஒதுங்கி இருந்து வரும் நிலையில் டிடி ஷாப்பிங் சென்றுள்ளார். ரசிகா்களின் அன்பு தொல்லையில் இருந்து தப்பிக்க அவா் முகத்தை மறைக்கும்படி உடை அணிந்து சென்றுள்ளார். அப்படி டிடி பர்தா அணிந்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.