பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான தாப்பா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

உங்கள் ரிமோட்டில் ஆதித்யா சேனலை திருப்பினால் நிச்சயம் தாப்பா ஏதாவது பேசிக்கொண்டிருப்பார். மேலும், வேதாளம், விஸ்வாசம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் காமெடி நடிகையாக அவர் நடித்திருந்தார்.

இவரிடம் ‘உங்களுக்கு எப்போது திருமணம்?’ என ரசிகர்கள் பல வருடங்களாக கேட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் தனது நீண்ட நாள் காதலரை தாப்பா திருமணம் செய்து கொண்டார். இருவரும் 10 வருடங்களாக காதலித்து வந்ததாகவும், பல போராட்டங்களுக்கு பின் திருமணம் நடந்துள்ளதாகவும் தாப்பா தெரிவித்துள்ளார். இவர் நேபாளத்தை பூர்வீகமாக கொண்டவர்.

அவரது கணவர் பிரபல நடன இயக்குனர்களிடம் உதவியாளராக பணிபுரிந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.